Saturday, October 15, 2011

சத்தம் இல்லாத உலகம் வேண்டும்.

இன்றைய சிந்தனைத்துளி:

சத்தம்! சத்தம்! ஒரே சத்தம்! வீட்டில் சத்தம். ரோட்டில் சத்தம். அலுவலகத்தில் சத்தம். எங்கெங்கு காணினும் சத்தமடா! என்று அலுத்துக்கொள்கிறீகளா. உண்மைதான். இது சத்தமான உலகம்தான். சத்தம், கூப்பாடு, அலறல் போன்ற சத்தங்கள் நிறைந்த உலகம்தான்.

சிலர் சத்தத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள். தங்கள் தனிமையை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலாமல் அச்சத்தைப் போக்கிக் கொள்ள சத்தத்தை பயன்படுத்துகிறார்கள்.

நம் வீட்டில் அனைவருக்கும் எங்காவது ஊருக்குப் போயிருப்பார்கள். இரவு நேரமாகிவிட்டால் பயத்தைப் போக்க டி.வியைச் சத்தமாக வைப்போம். இது எதற்காக? தங்கள் மனதில் தனிமையினால் ஏற்படும் அச்சத்தைப் போக்குவதற்காகத்தான்.

சிலர் தங்கள் சத்தங்களினால் நல்ல தங்கள் சிந்தனைகளையும் பூட்டி விடுகிறார்கள். எப்போதும் இசை கேட்பது, அரட்டை அடிப்பது, டி.வி. பார்ப்பது. என்று பிசியாக இருப்பது போல் நடித்துக்கொண்டு தங்கள் சிந்தனை ஊற்றுகளை அடைத்து விடுகிறார்கள். நல்ல சிந்தனைகள்தான் செயல்களாக மாறி நாட்டில் பெரிய பெரிய மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஆனால் இவர்கள் தனிமையில் இருப்பதையே தவிர்த்து விடுகிறார்கள்.

தனிமையை தவறாக பயன்படுத்தாமல் முறையாய் பயன்படுத்தியதால்தான் மனிதகுலத்திற்கு அரிய கண்டுபிடிப்புளெல்லாம் பொக்கிஷங்களாய் கிடைத்திருக்கின்றன.

உங்கள் தனிமையை பயனுள்ளதாய் அமைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு வளம் பெறும்.

அமைதியை விரும்புவர்களுக்கு இந்த உலகில் ஒதுங்க இடம் கிடைப்பது கஷ்டம்தான்.

சரி. நமக்கு அமைதி வேண்டும். என்ன செய்யலாம்?

ஒரு உதாரணம் சொல்கிறேன்.

குடம் நிறைய தண்ணீர் இருக்கிறது. தூக்கிப்பாருங்கள். என்ன கனம் கனக்கிறது? அதே குடத்தை நீங்கள் தண்ணீருக்குள் தூக்கிப் பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு எளிதாய் இருக்கிறது.

இறைபக்தி உங்களுக்குள் பொங்கும்போது மனம் எளிதாகிவிடுகிறது.

எல்லாம் நான் நான் நான்தான். எல்லாவற்றிற்கும் நானே காரணம். நானேதான் எல்லாவற்றையும் சகிக்க வேண்டியிருக்கிறது என்ற எண்ணம்தான் உங்கள் துன்பத்திற்கு காரணம்.

சரி. வேறென்ன செய்வது என்கிறீர்களா?

நமது கடமையை ஒழுங்காய் செய்வோம். விளைவுகளை இறைவனிடம் விட்டுவிடுவோம். அப்போது அமைதி எனும் நதி உங்கள் உள்ளங்களில் வற்றாத ஜீவநதியாய் ஓடிக்கொண்டேயிருக்கும்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

5 comments:

  1. தனிமை பற்றியும், சில செயல்படுத்த தகுந்த நல்ல சிந்தனைகள் பற்றிய பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நன்றி செழியன்! தங்கள் கருத்துரைக்கு நன்றி! மொபைல் மூலமாய் கருத்துரை வெளியிடும்போது தமிழில் எழுத முடியாமல் போகிறது. மன்னிக்கவும்.

    ReplyDelete
  3. ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோ. லட்சுமி!

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.