Wednesday, March 7, 2012

சின்ன சின்ன சிந்தனைகள் - பார்த்தலும் கேட்டலும்




சின்ன சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத் துளி. ஒரு பள்ளியில் ஒரு பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நடந்தது. எல்லா ஆசியர்களும், பெற்றோர்களும், மாணவர்களும், கற்றறிந்த பெரியோர் பலரும் கூடியிருந்தனர். பலரும் பல தலைப்புகளில் அருமையாக பேசினர்.

கடைசியாக பேச மேடையேறிய ஒரு பெற்றோர் இவ்விதமாக கூறினர், “ எங்களுக்கு நல்ல பிள்ளைகள்தான் வேண்டும். நாங்க நினைத்தது போல எங்கள் பிள்ளைகள் இல்லை. அவர்களை மாற்ற வேண்டியது உங்க பொறுப்பு” என்று அங்கிருந்த ஆசிரியர்களைப் பார்த்து கூறிவிட்டு மேடையைவிட்டு இறங்கினர்.

அடுத்து மேடையேறின ஒரு மாணவர் குழு இவ்விதமாய் மைக்கில் கூறியது. “எங்களுக்கு நல்ல பெற்றோர்கள்தான் வேண்டும். நாங்க நினைத்தது போல எங்கள் பெற்றோர்கள் இல்லை. அவர்களை மாற்றுவது யார்?” என்று கேட்ட கேள்விக்கு அந்த அவையில் மௌனமே நிலவியது.

இது ஒரு உதாரணத்துக்குத்தான். மாணவர்களின் மாற்றத்தை விரும்பும் பெற்றோர் அவர்களுக்காக தங்களை மாற்றிக்கொள்ளத் தயாரில்லை. இதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் நிலைமை. நீங்கள் காலை 8 மணிக்கு கண்விழித்துவிட்டு பிள்ளைகளை 5 மணிக்கே எழும்பி படிக்க வேண்டும் என்று கூறுவது எவ்வளவு பெரிய தவறு?!




பிள்ளைகளுக்கான பெற்றோராக நாம் மாறுகிறோமா? என்று பெற்றோர்கள் கொஞ்சம் சிந்தித்துத்தான் ஆகவேண்டும். முதலில் பெற்றோர்கள் தங்கள் பழக்கவழக்கங்களையும், நடத்தைகளையும் தூய்மைப் படுத்த வேண்டும். நீங்கள் சுறுசுறுப்புள்ளவர்களாய் இருந்தால் உங்கள் பிள்ளைகளும் சுறுசுறுப்புள்ளவர்களாய் இருப்பார்கள்.

உங்கள் வாழ்க்கைதான் அவர்களுக்கு கண்ணாடி. கண்ணாடி எப்படி இருக்கிறதோ அப்படித்தான் உருவமும் இருக்கும். மறவாதிருங்கள் ! 'உங்களைப் பார்த்துத்தான் அவர்கள் பார்க்க கற்றுக்கொள்கிறார்கள். உங்களைப் பார்த்துத்தான் கேட்கவும் கற்றுக்கொள்கிறார்கள்'.

உங்கள் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் உங்கள் வாழ்க்கை அமையட்டும். ஏதோ ஒரு சினிமா ஹீரோவோ அல்ல ஹீரோயினோ அல்ல. நீங்களே அவர்களுக்கு ரோல் மாடலாய் மாறுங்கள்! அவர்கள் வாழ்க்கை இனிக்கும்! உங்கள் வாழ்க்கையும் கூடத்தான்.





“ பிள்ளைகள் பெற்றோரின் சொத்துக்களை மட்டுமல்ல. அவர்களின் பழக்கவழங்கங்களையும், நடத்தைகளையும் கூட சுதந்தரித்துக்கொள்கிறார்கள்”




******

டிஸ்கி:
பிளாக் எழுத வந்த புதிதில் இந்த சின்ன சின்ன சிந்தனைகள் தொடரை தினமும் எழுதி வந்தேன். பிறகு விட்டுவிட்டேன். இப்போது தொடர்ந்து எழுதலாம் என்று தீர்மானித்துள்ளேன். பார்க்கலாம். எப்படி போகிறதென்று.




.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

15 comments:

  1. நல்லதாரு சிந்தனையை நயமாக முன்வைத்தீர்கள். நன்று.

    தொடருங்கள் நண்பரே

    ReplyDelete
  2. @ தங்கள் முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  3. @ முனைவர் குணசீலன்

    - வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி முனைவரே! தங்கள் ஆலோசனைப்படி தினமும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. உண்மைதான். பெற்றோர்கள்தாம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாய்த் திகழவேண்டும். தம்மிடம் குறையை வைத்துக்கொண்டு பிள்ளைகளைச் சாடுவது எவ்விதத்திலும் சரியில்லை. எந்நேரமும் தாம் தொலைக்காட்சி முன் அமர்ந்துகொண்டு பிள்ளைகளைப் படி படி என்றால் எப்படிப் படிப்பார்கள்! அந்தந்த வேலைக்கு என்று நேரம் ஒதுக்குவது போல் இதற்கும் நேரம் ஒதுக்கி மற்ற நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க பெற்றோர் முன்வர வேண்டும். குழந்தைகளும் தாமாக முன்வருவார்கள்.

    நல்ல சிந்தனைகளைத் தொய்வில்லாமல் தொடர்ந்து வழங்குங்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  5. ஊர்ல உள்ள பசங்கலெல்லாம்..என்னப்பாத்து உங்கப்பா மாதிரியே இருக்குறாய் என்னு சொல்லுவாங்க..

    உண்மையும் அதுதான் என் அப்பவினுடைய அனைத்து செயற்பாடுகளையும் நான் கொப்பி பன்னியுள்ளேன்..காரணம் என் அப்பா எனக்கு நல்லதே சொல்லி தந்தார்.பிறருக்கும் நல்லதே செய்தார்..

    மிக அருமையான சிந்தனை..பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. சின்னச் சின்ன சிந்தனைகள் பெரிய பெரிய விஷயங்களைச் சொல்கிறது துரை. தொடருங்கள்...

    ReplyDelete
  7. அருமைப்பதிவு .

    நல்ல முயற்சி வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நன்றாக இருக்கு ..தொடருங்கள்

    ReplyDelete
  9. மிகச்சரியான உண்மையே . பெற்றோகளின் குணங்களை வெளிக்காட்டும் பிள்ளைகளும் உண்டு . எனவே எந்த செயலும் பிள்ளைகளை பாதிக்காத வண்ணம் பெற்றோர்கள் இருக்க வேண்டும் என்ற இன்றைய சூழலுக்கு ஏற்ற அருமையான பதிவு .

    ReplyDelete
  10. அருமையான சிந்தனை
    குழந்தைகள் நாம் எப்படி இருக்கிறோமோ
    அப்படித்தான் வளர்வார்கள்
    நாம் கற்றுக் கொடுக்கிற படியல்ல
    மனம் கவர்ந்த பதிவு
    சிந்தனைகள் தொடரட்டும்

    ReplyDelete
  11. தொடருங்கள் சார் ! சிந்தனைகள் அருமை !

    ReplyDelete
  12. பயனுள்ள முயற்சி தொடரட்டும் தோழரே.........
    த .ம.8

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.