Thursday, April 12, 2012

உயிர் பறித்துப் போ சுனாமியே!

மனித முகங்களணிந்த
மிருகக் கூட்டங்கள்
இருக்கும் வேளையில் மட்டும்
வந்து போ!

எங்கள் தேசத்தில்
கூட்டல் கணக்கை விட
கழித்தல் கணக்குதான்
அதிகம் செய்யவேண்டியிருக்கிறது

சுத்திகரிக்கும் பணியை
ஒற்றைச் சூறாவளியாய்
செய்துவிட்டுப் போ!

ஒரு நிபந்தனைதான்
களைகளை மட்டும்
பிடுங்கி எடு
பயிர்களை விட்டுவிடு
அது போதும் எங்களுக்கு!

வா!
வந்து விடு!
எங்களால் இயலவில்லை
நீயாவது
உதவி செய்!


.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

18 comments:

  1. ஒரு நிபந்தனைதான்
    களைகளை மட்டும்
    பிடுங்கி எடு
    பயிர்களை விட்டுவிடு
    >>
    பயிர்களும் பறிபோவதினால்தான் தெய்வத்தின் மீதே நம்பிக்கை அற்று போய்விடுகிறது. நல்லதொரு கவி. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  2. உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..

    அருமையான பதிவு சகோதரர். நன்றி

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  3. துரை நல்ல கவிதை, நல்ல சிந்தனை, வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நல்ல சிந்தனை!

    //சுத்திகரிக்கும் பணியை
    ஒற்றைச் சூறாவளியாய்
    செய்துவிட்டுப் போ!///

    ReplyDelete
  5. // வா!
    வந்து விடு!
    எங்களால் இயலவில்லை
    நீயாவது
    உதவி செய்!//

    இனிக்கும் கவிதைக் கரும்பு
    மணக்கும் மல்லிகை அரும்பு
    கனிக்கும் இல்லாத சுவை
    கவிதைக்குத் தேவை இவை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  6. \\\எங்கள் தேசத்தில்
    கூட்டல் கணக்கை விட
    கழித்தல் கணக்குதான்
    அதிகம் செய்யவேண்டியிருக்கிறது\\\ உண்மை!

    ReplyDelete
  7. நல்ல சிந்தனையைப் பதிவு செய்த அருமையான கவிதை.

    ReplyDelete
  8. களைய வேண்டிய களைகள்
    ஆயிரம் இங்குண்டு
    களைந்துவிட்டு செல் என..
    கூறியிருக்கும் பாங்கு
    அருமை அருமை..

    ReplyDelete
  9. ஒரு நிபந்தனைதான்
    களைகளை மட்டும்
    பிடுங்கி எடு
    பயிர்களை விட்டுவிடு
    அது போதும் எங்களுக்கு!//
    நானும் வேண்டுவது அதுவே .

    ReplyDelete
  10. நல்ல வேண்டு கோளாய் இருக்கிறதே
    நடந்தால ரொம்ப சந்தோஷமே
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. பாவம் தான் சுனாமி....

    ReplyDelete
  12. @ ராஜி
    @ Ashiq Ahamed
    @ கும்மாச்சி
    @ நம்பிக்கை பாண்டியன் (முதல் வருகைக்கு மிக்க நன்றி)
    @ புலவர் சா இராமாநுசம்
    @ Koodal Bala
    @ கணேஷ்
    @ மகேந்திரன்
    @ சசிகலா
    @ ரமணி
    @ Arouna Selavamae

    - வருகை தந்து வாக்கிட்டு கருத்துரையிட்டு ஆதரவு தந்த அத்தனை உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. விரிவான அழகான பின்னூட்டமிட்ட அத்தனை பேருக்கும் ஸ்பெசல் தாங்ஸ்.

    - தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த பல நாட்களாக பதிவிடவோ தங்களைப் போன்ற பாசமிக்க பதிவர்களின் தளங்களுக்கு வருகை தரவோ கருத்துரை இடவோ என்னால் இயலவில்லை. சொல்லப் போனால் பதிவுலகை விட்டு விலகி விடலாமா என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் பலநாட்கள் வராவிட்டாலும் இன்று பதிவிட்டவுடன் தாங்கள் அனைவரும் வருகை தந்து கருத்துரையிட்ட அன்பு நெகிழச் செய்கிறது. இந்த அன்புக்கு என்ன ஈடு செய்வேன்? தெரியவில்லை. இது. இதுதான் என்னை இங்கு இயங்கச் செய்கிறது. யோசிக்க வைக்கிறது. குறிப்பாக தொடர்ந்து ஆதரவு தரும் அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

    ReplyDelete
  13. //களைகளை மட்டும்
    பிடுங்கி எடு
    பயிர்களை விட்டுவிடு
    அது போதும் எங்களுக்கு!//

    நல்ல வேண்டுகோள்....

    நல்ல கவிதை நண்பரே...

    ReplyDelete
  14. @ வெங்கட் நாகராஜ்

    - தங்களது வருகைக்குமம் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  15. களைகளில்லா சமூகம் எதிர்பார்க்கிறீர்கள் டானியல்...ம்ம் !

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.