Saturday, April 21, 2012

மனித எண்ணங்களை பதிவு செய்ய முடியுமா? - ஒரு விஞ்ஞானப் பார்வை







அமெரிக்காவைச் சேர்ந்த Dr,N.J.ஸ்டோவெல் என்பவர் ஒரு நாத்திகராக இருந்தார். அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அவரை ஆத்திகராகச் செய்தது. ஒரு நாள், இவர் தன் குழுவினருடன் நோய்களைப் பற்றி ஆராயும் ஆய்வுக் கூடத்தில் (Pathological Laboratory) மனித மூளையின் அலைகளின் நீளத்தை அளக்கும் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். எப்படி மனிதனுக்கு மனிதன் கைரேகையில் வித்தியாசம் காணப்படுகிறரோ அவ்வாறே, ஒவ்வொரு மனிதனின் மூளையிலிருந்து வெளிப்படும் அலைகளிலும் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இந்த அலைவரிசைகளைப் பதிவு செய்வதின் மூலம் அவர்களின் சிந்தனையையும் பதிவு செய்ய சாத்தியம் உள்ளது என்பதை முடியும் என்பதை அவர் அறியலானார்.

அடுத்ததாக ஒரு மனிதனின் உயிர் போகும் போது அவன் மூளை எப்படி செயல்படுகிறது, அதன் அலைகளின் மாதிரி எப்படி உள்ளது என்பதைக் கணிக்க விரும்பினர் அவரது குழுவினர். பரிசோதனைக்கு ஒரு பெண்ணைத் தெரிந்து கொண்டனர். மூளையில் ஏற்பட்ட புற்றுநோயினால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருந்தாள். இதனால், தடுமாறிக் கீழே விழாமல் அவளால் நடக்க முடியவில்லை. இந்தப் பிரச்சினையைத் தவிர மற்றபடி அவளுடைய சிந்தனை தெளிவாகவே இருந்தது.

அவளுடைய மரணவேளையும் வந்தது. அவள் மரணத்தைச் சந்திக்கப் போகிறாள் என்ற செய்தியும் அவளுக்குச் சொல்லப்பட்டது. அவள் உயிர் பிரியும் வேளையில் அவளுடைய மூளையில் நடைபெறுவது என்ன என்பதைப் பதிவு செய்ய ஓர் இயந்திரம் அமைக்கப்பட்டது. மேலும், அவள் இறுதியாக ஏதாவது கூறினால் அதைப் பதிவு செய்யும்படியாக அந்த அறையில் ஒரு சிறு ‘மைக்ரோபோன்’ வைக்கப்பட்டது. இப்பதிவுகளை ஆய்வு செய்ய ஐந்து விஞ்ஞானிகள் கொண்ட விஞ்ஞானிகள் குழுவும் தயாராக இருந்தது.

அவர்களுக்கு முன்பிருந்த கருவியின் முள்ளானது மையத்தில் (Centre Part) பூஜ்ஜியத்தில் இருந்தது. வலது பக்கத்தில் +500 வரை அளவீடுகள் குறிக்கப்பட்டிருந்தன. இடது பக்கத்தில் -500 வரை அளவீடுகள் குறிக்கப்பட்டிருந்தன. ஐம்பது கிலோ வாட் சக்தி வாய்ந்த ஒலிபரப்பு நிலையத்தின் அலைகளை இக்கருவியில் செலுத்திய பொழுது அந்த முள்ளின் அளவீடு +9 என காட்டியது.

மரணத்தின் இறுதி வேளையை நெருங்கிக் கொண்டிருந்த அந்த பெண் அப்போது பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள். தான் செய்த பாவங்களை மன்னிக்கும்படியும் யாருக்காவது துரோகம் செய்திருந்தால் பொறுத்தருளும்படியும் வேண்டிக்கொண்டும் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.
இவை அனைத்தையும் மறு அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த விஞ்ஞானிகள் குழு வியப்பில் ஆழ்ந்தனர். திடீரென்று அவர்களுக்கு முன்பிருந்த அந்த கருவியின் முள்ளானது ப்ளஸ் (+) பகுதியில் 500 ஐத் தொட்டு (+500) அதற்கு மேலாக செல்ல முடியாமல் அழுத்திக் கொண்டு நின்றது. மூளையிலிருந்து வெளிப்பட்ட அலைகளின் ஆற்றல் 50 கிலோ வாட் ஒலிபரப்பு நிலையத்தின் ஆற்றலைவிட சுமார் 55 மடங்கு அதிகமாகக் காணப்பட்டது. பின்பு அவள் அமைதியான முறையில் மரணமடைந்தாள்.

அடுத்த பரிசோதனையாக, மரணத் தருவாயில் இருக்கும் மோசமான நடத்தை உள்ள ஒரு மனிதனை இச்சோதனைக்கு உட்படுத்தினர். அவன் எல்லாவித பாவங்களையும் துணிகரமாகச் செய்து வாழ்ந்து வந்தவன். அவனுடைய மரண வேளையில் மூளையில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க விரும்பினர். அவன் அந்த கடைசி மரண வேளையிலும் மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு நர்ஸ் மீது காதல் வெறி கொண்டான். காம வெறி பிடித்து அவளை அடைய முயற்சி செய்தான். அவள் மறுத்த போது மூர்க்க வெறி கொண்டான். அனைவரும் அவனை வெறுத்தனர். அப்படிப் பட்ட அந்த சூழ்நிலையில் அவனை இப்பரிசோதனைக்கு உட்படுத்திய போது அந்தக் கருவியின் முள்ளானது மைனஸ் (-) பகுதியின் கடைசிக்குச் சென்று (-500) முட்டி அலசடிப்பட்டு பிறகு நின்று விட்டது. அதாவது அவன் மரணமடைந்தான்.

விஞ்ஞானிகள் குழு கடவுள் பக்தி கொண்டவர்களின் மூளை ஆற்றலுக்கும், கடவுள் பயமற்ற மோசமான நடத்தை கொண்டவர்களின் மூளை ஆற்றலுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டு கொண்டனர். ஆராய்ச்சியின் முடிவு அவர்களுக்கு பெருத்த ஆச்சர்யத்தை அளித்தது. நமக்கும்தான் அல்லவா?

கடவுள் பக்தி உண்டாகிற போது நமது வாழ்க்கை முறையும் மாறிவிடுகிறது. உடலும் மனதும் ஆரோக்கியமடைகிறது என்பதே மாறாத உண்மை.





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

34 comments:

  1. கடவுள் பக்தி உண்டாகிற போது நமது வாழ்க்கை முறையும் மாறிவிடுகிறது. உடலும் மனதும் ஆரோக்கியமடைகிறது என்பதே மாறாத உண்மை.// வித்தியாசமான பதிவு அறிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றிங்க .

    ReplyDelete
  2. அப்படியா... அடேங்கப்பா....

    பகிர்வுக்கும் அருமையான தகவலுக்கும் நன்றி

    ReplyDelete
  3. இந்த உண்மை வயதான காலத்தில் பலபேர் உணர்
    வதாகும்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  4. வித்தியாசமான புதுமையான பதிவு நண்பரே

    ///எப்படி மனிதனுக்கு மனிதன் கைரேகையில் வித்தியாசம் காணப்படுகிறரோ அவ்வாறே, ஒவ்வொரு மனிதனின் மூளையிலிருந்து வெளிப்படும் அலைகளிலும் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.///

    இந்த விடயத்தை இப்போது தான் அறிந்துக் கொண்டேன் பகிர்வுக்கு நன்றி தமிழ்மணம் 4

    ReplyDelete
  5. உண்மைதான் தோழரே

    சிறந்த பதிவு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. புதுமையான செய்தி நல்ல பதிவு - நன்றி

    நான் பணிபுரிந்த இடத்தில் மூளை சம்மந்தமாக American கம்பெனிக்காக Animation Project செய்தார்கள். இதில் நல்ல விதமாக சிந்திக்கின்ற மனித மூளை நேரகவும் சிராகவும். எதிர்கா சிந்திக்கின்றா மனித மூளை காரடு முரடகாவும் இயங்கவுதாக அந்த Animation பார்த்தேன்.

    ReplyDelete
  7. மூளையின் ஆற்றல் பற்றி திரு துரை டேனியல் அவர்களின் அருமையான பதிவு.
    வாழ்த்துகள் திரு துரை டேனியல்.

    ReplyDelete
  8. அறியாத அரிய தகவல்
    சொல்லிச் சென்ற விதமும் மிக மிக அற்புதம்
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. சிறந்த பதிவு.., வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  10. @ சசிகலா

    - உடனடி வருகைக்கும் (நான்தான் லேட்டோ?) கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  11. //கடவுள் பக்தி உண்டாகிற போது நமது வாழ்க்கை முறையும் மாறிவிடுகிறது. உடலும் மனதும் ஆரோக்கியமடைகிறது என்பதே மாறாத உண்மை. //

    கேட்கவே சந்தோஷமாக உள்ளது. நம் முன்னோர்கள் எல்லோரும் இதை அறிந்து வைத்துத்தான் பக்தி செலுத்தி வந்துள்ளனர்.

    ஆராய்ச்சியும் அதையே கண்டுபிடித்துச் சொல்லியுள்ளது சிலருக்கு ஆச்சர்யமாகக் கூட இருக்கலாம்.

    நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. கடவுள்மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடவுள்,கோவில் எனும்போது மனதில் ஒரு அமைதி.விஞ்ஞானமும் அதையேதான் சொல்ல வருகிறது.நல்லதொரு கட்டுரை !

    ReplyDelete
  13. கடவுள் பக்தி உண்டாகிற போது நமது வாழ்க்கை முறையும் மாறிவிடுகிறது. உடலும் மனதும் ஆரோக்கியமடைகிறது என்பதே மாறாத உண்மை.

    அதனால் தான் நம்முன்னோர்கள் பக்தியையும் “பயபக்தி“ என்றார்கள் போலும்.

    ReplyDelete
  14. @ மகேந்திரன்

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  15. @ மனசாட்சி

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  16. @ புலவர் சா இராமாநுசம்

    - உண்மைதான் அய்யா. ஆனாலும் இளம் வயதிலேயே ஞானம் வந்தால் நல்லது இல்லையா? கண்கெட்டபின்பு.....?!

    ReplyDelete
  17. @ ஹைதர் அலி

    - வாங்க சகோ. நல்லாருக்கீங்களா? வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  18. @ தமிழ்மகன்

    - தங்கள் முதல் வருகைக்கும் விளம்பரத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  19. @ Seeni

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  20. @ செய்தாலி

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  21. @ Wesmob

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  22. @ Nizam

    - அப்படியா சகோ? ஓ.கே. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  23. @ Koodal Bala

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  24. @ Rathnavel Natarajan

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  25. @ Ramani

    - வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  26. @ வரலாற்றுச் சுவடுகள்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  27. @ வை. கோபாலகிருஷ்ணன்

    - வாங்க சார். நல்லாருக்கீங்களா? தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  28. @ ஹேமா

    - அப்படியா சகோ. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  29. அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.